அதிர்ச்சி : நடிகர் வடிவேலுக்கு கொரோனா, ஒமிக்ரான் பரிசோதனை..

தமிழகதில் ஒமிக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதிலும் கொரோனாவால் திரை பிரபலங்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் பிரபல நடிகர்கள் கமலஹாசன், அர்ஜுன், மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில்இவர்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படம் நடிக்க ஆரம்பித்துள்ள வைகைப்புயல் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது திரைத்துறையினரிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு  முன்பு  பூஜையோடு துவங்கியது. பட வேலைக்காக திரைப்பட குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார்.

லண்டனில் பணிகள் முடிந்து சில நாட்களுக்கு முன் நடிகர் வடிவேலு சென்னை திரும்பினார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.`

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment