கொரோனா உறுதியானவர்களை அழைத்து செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை முதல்வர் தொடங்கி வைத்தார்

உலகம் முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலையான ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது . இந்தியாவிலும் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தற்போது பரவியுள்ள ஓமிக்ரான் அடுத்து வரும் நாட்களில் தான் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஒரு புறமும் ஏற்படுத்தாது என இன்னொரு புறமும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் யாராலுமே கணிக்க முடியாத நிலையில் மக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை ஒட்டி  தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார் அதன் ஒரு பகுதியாக கொரோனா பாதித்தவர்களை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் சற்றுமுன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment