Connect with us

கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை-குறைவு! தொடர்ந்து குறைந்தால் ஊரடங்கு தேவையில்லை!!

உயிரிழப்பு

செய்திகள்

கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை-குறைவு! தொடர்ந்து குறைந்தால் ஊரடங்கு தேவையில்லை!!

கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை-குறைவு! தொடர்ந்து குறைந்தால் ஊரடங்கு தேவையில்லை!!

ஜனவரி 25ஆம் தேதி அன்றைய தினம் தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் மக்கள் நலத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தியாகி அரங்கநாதன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை, குறைவாகவே உள்ளது என்று கூறினார்.

ஒமைக்ரான்  மற்றும் டெல்டாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைவு என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். கொரோனா  பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் சரியான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அளிக்க வேண்டுமென்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

கொரோனா  எண்ணிக்கை தொடர்ந்து குறையும் பட்சத்தில் ஊரடங்கு தேவையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியுள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களில் பாதிப்பின் நிலைமை தெரிய வரும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top