கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள்- ஆளுநர் பெயரில் பொய் தகவல் பரப்பியோரை போலீஸ் தேடுகிறது

கொரோனா காரணமாக எல்லா மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 50 சதவீத தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநரின் பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பியவரை போலீஸ் தேடி வருகிறது.

ஆளுநரின் பெயரை பயன்படுத்தி புதுச்சேரியில் முழு ஊரடங்கு என தகவல் பரப்பியவரை சைபர் க்ரைம் போலீஸ் தேடுகிறது.

மேலும் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர்  ஸ்ரீராமுலு கூறுகையில், “ஒமைக்ரான் தொற்று புதுச்சேரியில் இருவருக்கு மட்டுமே உறுதியாகி சரியானது.

இதுவரையில் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய பெங்களூரு ஆய்வகத்துக்கு 126 பேரின் மாதிரிகளை அனுப்பியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment