Connect with us

எகிறும் கொரோனா பரவல்: மாநில அரசுகளுக்கு அதிரடி கடிதம்!!!

202105231545311120 Tamil News Tamil News Corona infection in 18 people on the same street SECVPF 1

தமிழகம்

எகிறும் கொரோனா பரவல்: மாநில அரசுகளுக்கு அதிரடி கடிதம்!!!

கொரோனா தொற்று பரவலை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்றைய தினத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பல்வேறு வகையான கொரோனா வைரஸ் திரிபானது குஜராத், மகாராஷ்டிரா, உ.பி, டெல்லி போன்ற மாநிலங்களில் பரவி வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கொரோனா பரவலை தடுப்பதற்கு அனைத்து மாநிலங்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் பூஷண் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top