புதுப்புது பெயர்களில் உலகத்தை புரட்டுகிறது கொரோனா! இந்தியாவில் பாதிப்பில்லை!!

கண்ணுக்கே தெரியாமல் மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தி இறுதியில் உயிரை குடிக்கும் ஒரு கொடிய வைரஸ் கொரோனா. இது முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகமெங்கும் வெகு வேகமாக கொரோனா பரவியது.

கொரோனா

குறிப்பாக இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காணப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் புதிய வகை கொரோனா ஒன்று பரவ தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்தியாவில் அந்த புதிய வகை கொரோனா பாதிப்பில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அதன்படி அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பி.1.1.529 என்ற புதிய வகை கொரொனா ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பரவி வரும் நிலையில் மத்திய அரசு இந்தியாவில் கொரோனா  பாதிப்பில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.இந்தியாவில் பாதிப்பில்லை என்றாலும் நாம் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment