Connect with us

கொரோனா அதிகம் பாதிப்பது கிராமங்களிலா? நகரங்களிலா? இரண்டு நாட்களில் குறைந்தது பாதிப்பு;

view-of-a-coronavirus-covid-19-background-3d-rendering

செய்திகள்

கொரோனா அதிகம் பாதிப்பது கிராமங்களிலா? நகரங்களிலா? இரண்டு நாட்களில் குறைந்தது பாதிப்பு;

கொரோனா அதிகம் பாதிப்பது கிராமங்களிலா? நகரங்களிலா? இரண்டு நாட்களில் குறைந்தது பாதிப்பு;

இந்தியாவில் கடந்த மாதம் ஒமிகிரான் பாதிப்பு பரவ தொடங்கியது. இந்த ஒமிகிரான் பாதிப்பு பரவ தொடங்கியது அது மட்டுமில்லாமல் கொரோனா  பாதிப்பும் அதிதீவிர வேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக இரண்டு லட்சத்தையும் தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகிக் கொண்டே வருகிறது.

நம் தமிழகத்திலும் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள் பதிவாகிக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக காணப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக கிராமங்களில் நிகழ்கிறதா? அல்லது நகரங்களில் நிகழ்ந்ததா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் கிராமப்புற தெருக்கள் சுமார் 1.70 லட்சம் உள்ளதாக காணப்படுகிறது.

இந்த 1.70 லட்சம் தெருக்களில் 22,000 தெருக்கள் பாதிப்புள்ளதாக காணப்படுகிறது. இந்த 22,000 தெருக்களில் 350 தெருக்கள் அதிக பாதிப்பு உள்ளதாக காணப்படுகிறது.

இதேவேளையில் தமிழ்நாட்டில் மொத்தம் நகர்புறத்தில் 1.27 லட்சம் தெருக்கள் காணப்படுகிறது. இந்த 1.27 லட்சம் நகர்ப்புற தெருக்களில் பாதிப்புள்ளதாக 21 ஆயிரம் தெருக்கள் காணப்படுகிறது. இந்த 21 ஆயிரம் தீவுகளில் 3650 தெருக்களில் பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.

இதனால் பாதிப்பு அதிகம் உள்ள தெருக்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top