Connect with us

என்ன ஒரு ஆச்சரியம்! மாஸ்க் போட்டதும் காணாமல் போன கொரோனா.!!

MASK wear

தமிழகம்

என்ன ஒரு ஆச்சரியம்! மாஸ்க் போட்டதும் காணாமல் போன கொரோனா.!!

நம் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக கடன் நான்கு நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 2500 கடந்து பதிவாகி கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் புதிதாக 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. நேற்றைய தினம் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2772 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது என்றும் மருத்துவத்துறை கூறியுள்ளது.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் சென்று பதிவாகியுள்ளது.

தலைநகர் சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 844 ஆக குறைந்துள்ளது. நேற்றைய தினம் 933 ஆக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக இத்தகைய பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top