ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா விதிமீறல்: இத்தனை கோடி அபராதம் வசூலா?
இந்தியாவில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. முக கவசம் அணிவதை மீறினால் அவர்களுக்கு அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கொரோனா விதிமீறல் தொடர்பாக மூன்று கோடிக்கும் அதிகமாக அபராதம் வசூலிக்க பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முகக் கவசம் அணிவது உள்ளிட்ட விதிகளை மீறியது தொடர்பாக தமிழ்நாட்டில் ரூபாய் 3.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை முக கவசம் அணியாமல் சென்றதற்காக ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத அதற்காக 1910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் கூறியதற்காக 1552 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 7ஆம் தேதி முதல் 14ம் தேதி இரவு வரை பதிவான வழக்கங்களின் படி ரூபாய் 3 கோடியே 44 லட்சத்து 700 ரூபாய் அபராதம் வசூலிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா விதிகளை மீறியவர்கள் மீதான நடவடிக்கை குறித்து போலீசார் இத்தகைய தகவல் அளித்துள்ளனர்.
