சென்னையில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 0.6 சதவீதமாக இருந்த பாதிப்பு இந்த மாதம் கிட்டத்தட்ட 1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக மே மாதம் 7,564 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு நவம்பர் 20ம் தேதியில் 105 ஆக பதிவானது. இதனால் கடந்த வாரம் வரை சென்னையில் 115 முதல் 132 வரை கொரோனா பாதிப்பு பதிவானது. இந்த நிலையில் கொரோனாவின் புதிய பாதிப்பு 194 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 619 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அதில் மூன்றில் ஒரு பகுதி சென்னையில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. குடும்ப நிகழ்ச்சிகள், வேலை பார்க்கும் இடங்கள் மூலமாக சென்னையில் கொரோனா பாதிப்பு பரவுகிறது என தகவலும் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் தொற்று பாதிப்பும் சென்னையுடன் சேர்க்கப்படுவதால் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.