Connect with us

திண்டுக்கல் ஆசிரியைக்கு கொரோனா தொற்று: பள்ளி திறந்த நான்கே நாட்களில் விபரீதம்

News

திண்டுக்கல் ஆசிரியைக்கு கொரோனா தொற்று: பள்ளி திறந்த நான்கே நாட்களில் விபரீதம்

61b996e8bb87acb920bccc6e910cab84

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் பள்ளி திறந்த ஒரு சில நாட்களில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

3607f7ff48b92e9fa04dc18b4a257fa7

திண்டுக்கல் அருகே சின்ன காஞ்சிபுரம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியையாக ஒருவர் பணிபுரிந்து வந்தார் என்றும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது 

இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவரது வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கும் சக ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top