கொரொனா பரவல் அதிகரித்து வருவதால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

ராமேஸ்வரம் அருகே புகழ்பெற்ற கடற்கரை நகரமாக துறைமுகமாக தனுஷ்கோடி இருந்தது. இது கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலால் அழிந்தது.

இருப்பினும் புயலால் அழிந்த நினைவு சின்னங்களும், அழகிய கடற்கரையும் மட்டுமே நினைவு சின்னமாய் இருந்தது.

பல வருடங்கள் இந்த பகுதிக்கு செல்ல சிரமமான சூழ்நிலை இருந்து வந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்புதான் சாலை திறந்து வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் எளிதாக செல்வதற்கு வசதி செய்து தரப்பட்டது.

ராமேஸ்வரம் சுற்றுலா வரும் பயணிகள் இங்கு செல்லாமல் ஊர் திரும்புவதில்லை அவ்வளவு அதி முக்கியம் வாய்ந்த இடமாக இது இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் இங்கு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment