கங்குலியை பாதித்த கொரோனா மொத்த குடும்பத்தையும் பாதித்தது

சமீபத்தில்தான் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.

இவர் கடந்த டிசம்பர் இறுதியில் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது கங்குலி அவரது மகள் மற்றும் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அதன்படியே மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

கொரோனாவின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு சொல்லும் நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து கொரோனா தொற்று நம்மை அண்டாமல் பாதுகாப்புடன் வாழ்வது நமது கடமையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment