
தமிழகம்
அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு கொரோனா.!! மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடக்குமா?
2020ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏனென்றால் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
அதன் விளைவாக அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. மேலும் பல்கலைக் கழக தேர்வுகள் கூட ஆன்லைன் முறையில் வைத்து முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாதிப்பு சில நாட்களாக குறைந்து வந்த சூழலில் மீண்டும் மாணவர்களிடையே அதிகரிக்க தொடங்கியது. அதுவும் குறிப்பாக சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். இவ்வாறு உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் திடீரென்று கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவின் பாதிப்பு மாணவர்கள் மத்தியில் தென்பட்டு வருகிறது.
இந்த வகையில் மேலும் 3 பேருக்கு கொரோனாவின் பாதிப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மாணவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
