ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, குணமடைதல், உயிரிழப்பு நிலவரம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதி உச்சத்தில் காணப்பட்டது. அதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

இந்த நிலையில் இந்தியாவின் பெரும் முயற்சியால் தற்போது இந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டது இருப்பினும் தற்போது இந்த கொரோனா தாக்கம் ஆங்காங்கே காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா பாதிப்பு 3 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 987 லிருந்து, 3 கோடியே 43 லட்சத்து 77 ஆயிரத்து 113 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் ஒரே நாளில் 11982 பேர் கொரோனாவிலில் இருந்து குணம் அடைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் குணமடைதல் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 63 ஆயிரத்து 104 லிருந்து, 3 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 86 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா

இதனால் கொரோனாலிருந்து குணமடைந்தவரின் விகிதம் 98.25 ஆக உள்ளது; உயிரிழப்பு விகிதம் 1.34 ஆக காணப்படுகிறது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 332 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.

இதனால் இந்தியாவில் கொரோனா இறந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 61 ஆயிரத்து 57 லிருந்து 4 லட்சத்து 61 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 1 லட்சத்து 40 ஆயிரத்து 635 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment