Connect with us

8 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு: இரண்டு பள்ளிகள் மூடல்

Tamil Nadu

8 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு: இரண்டு பள்ளிகள் மூடல்

view-of-a-coronavirus-covid-19-background-3d-rendering

தமிழகத்தில் இரண்டு பள்ளிகளில் உள்ள எட்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதை அடுத்து அந்த இரண்டு பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே ஆனால் அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு அதில் இருந்து ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது

இந்த நிலையில் இன்று குன்னூர் அருகே உள்ள இரண்டு பள்ளிகளில் உள்ள 8 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குன்னூரில் உள்ள மவுண்ட் ரோடு என்ற பகுதியில் பெண்கள் பள்ளி மற்றும் அதே பகுதியில் உள்ள இன்னொரு பெண்கள் பள்ளியில் உள்ள எட்டு மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து இந்த இரண்டு பள்ளிகளும் மூடப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top