இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு…. கதறும் பிக்பாஸ் நடிகை….!

இந்த வாரம் கொரோனா வாரம் என்பது போல் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. மீண்டும் கொரோனாவின் பாதிப்பால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த முறை கொரோனாவால் திரைபிரபலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழ் நடிகர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தமிழ் நடிகர்கள் சத்யராஜ், அருண்விஜய், விஷ்ணு விஷால் மற்றும் நடிகைகள் த்ரிஷா, மீனா ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் பிரபல பிக்பாஸ் நடிகையும் இணைந்துள்ளார். அதுவும் இவருக்கு இரண்டாவது முறையாம்.

அவர் வேறு யாருமல்ல துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் இணைந்து துள்ளல் ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை ஷெரீன் தான். ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்த ஷெரீன் அதன் பின்னர் படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் அவர் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவானார்கள். இந்நிலையில் கொரோனா இண்டாவது அலையின்போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் ஷெரீன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். முறையாக தடுப்பூசி செலுத்தியும் இரண்டு முறை தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஷெரீன் மிகுந்த கவலையில் உள்ளாராம். இருப்பினும் விரைவில் குணமாகி விடுவேன் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment