Connect with us

மலையாள சூப்பர் ஸ்டாரை தாக்கியது கொரோனா! படக்குழுவினர் அறிவிப்பு;

mammootty

பொழுதுபோக்கு

மலையாள சூப்பர் ஸ்டாரை தாக்கியது கொரோனா! படக்குழுவினர் அறிவிப்பு;

மலையாள சூப்பர் ஸ்டாரை தாக்கியது கொரோனா! படக்குழுவினர் அறிவிப்பு;

இந்தியாவில் எதிர்பாரத விதமாக கடந்த ஆண்டு கட்டப்பட்ட கொரோனாவின் பாதிப்பு இந்த ஆண்டு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு மட்டுமின்றி கொரோனாவினால் உயிரிழப்புகளும் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் விளைவாக இந்தியாவில்  தினம்தோறும் 2.5 லட்சத்தை தாண்டி கொரோனா பாதிப்புகள் பதிவாகிக் கொண்டே வருகின்றன.

இவை இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி சினிமாத்துறையினர் மத்தியிலும் அதிகமாகவே தென்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், வடிவேலு, நடிகை குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வரிசையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தன.

இந்த கொரோனா  பாதிப்பு கேரளா சினிமாவையும் விட்டுவைக்காமல் அங்குள்ள பிரபலங்களுக்கும் கண்டறியப்பட்டு வருகிறது. அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கொரோனா  பாதிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தகவல் அளித்துள்ளனர். மம்முட்டி நடித்து வரும் சிபிஐ 5 என்ற தற்காலிகமாக பெயரிட்டுள்ள படத்தின் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top