மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

கண்ணுக்குத் தெரியாமல் மனிதனுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மிக வீரியத்துடன் பரவி வருகிறது கொரோனா. ஆயினும் இந்தியாவின் பெரு முயற்சியால் இந்த கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா

அதன்படி இந்தியாவில் நேற்றைய தினம் 6358 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று 9,195 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தவரின் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 43 ஆயிரத்து 945 லிருந்து, 3 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 292 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 7 ஆயிரத்து 347 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த டிஸ்சார்ஜ் ஆகி உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்த விகிதம் 98.40 %மாக காணப்படுகிறது. உயிரிழப்பின் விகிதம் 1.38 சதவீதமாக காணப்படுகிறது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 302 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 290 லிருந்து 4 லட்சத்து 80 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 77,002 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment