கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது கொரோனா! மூன்று நாளாக தமிழகம் அசத்தல்!!

நாம் தினந்தோறும் கொரோனா பாதிப்பு நிலவரத்தைப் பற்றி பார்த்துக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் 681 ஒரு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா

அதன்படி நம் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 681 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நம் தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக 700 க்கு கீழ் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 36 ஆயிரத்து 715 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 599 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனைகள், வீடுகள், கண்காணிப்பு மையங்களில் 7770 கொரோனா சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment