Connect with us

டாப் கியரில் செல்லும் கொரோனா; 3,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் அச்சம்!!

கொரோனா

தமிழகம்

டாப் கியரில் செல்லும் கொரோனா; 3,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் அச்சம்!!

கடந்த வாரம் முதல் மீண்டும் தமிழகத்தில் கொரோனாவின் ஆட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. ஏனென்றால் கடந்த வாரத்தில் இருந்து தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000ஐ தாண்டி பதிவாகி வந்தது.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் 2500ஐ தாண்டி கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாளும் பதிவாகி வருவது மக்களிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் 3000ஐ நெருங்கி கொரோனாவின் பாதிப்பு பதிவாகியுள்ளது மக்களை உறைய வைத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பை எண்ணிக்கை 2654 இல் இருந்து 2765 ஆக உயர்ந்துள்ளது என்று மருத்துவத்துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில் எண்ணிக்கை 38028 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,717 இல் இருந்து 18,378 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 2103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top