Connect with us

மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டி நடைபெறுமா?

Sports

மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா: ஐபிஎல் போட்டி நடைபெறுமா?

e86c0adf04bae5ac84e00e7b19c68aa3

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது 

இந்திய அணி இலங்கைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தது என்பதும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி என்பதும் தெரிந்ததே 

ஒருநாள் தொடரை இந்தியாவும் டி20 தொடரை இலங்கையும் வென்றுள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய அணியைச் சேர்ந்த க்ருணால் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 2வது டி20 போட்டி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் க்ருணால் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த எட்டு பேரிடம் சோதனை செய்ததில் மேலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்துள்ளது. சாஹல்  மற்றும் கௌதம் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பரவி வருவதால் ஐபிஎல் போட்டியை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top