News
மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டை சேர்ந்த மூன்று மாணவிகளுக்கு கொரோனா!
தற்போது நம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் இதற்கு முந்தைய சில மாதங்களில் கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர்.
ஆனால் பள்ளி கல்லூரி பிறந்த சில நாட்களிலேயே கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இந்த கொரோனா நோயின் பரவல் கண்டறியப்படுகிறது.இந்நிலையில் தற்போது மருத்துவக் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவிகளுக்கு இந்த கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட அந்த 3 மாணவிகளும் ராஜாஜி மருத்துவமனை சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சக மாணவ-மாணவிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 350 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் வேறு யாருக்கும் இந்த கொரோனா தொற்று பரவ வில்லை என்று தெரிந்துள்ளது.
