Connect with us

மாணவர்களுக்கு கொரோனா: பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை

Tamil Nadu

மாணவர்களுக்கு கொரோனா: பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை

39e395be577da24493c77f7c5c7569b2-1-2

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஒரு சில இடங்களில் சில மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தாலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்புடன் பள்ளி மாணவர்கள் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கோவை மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் நாளை முதல் அந்த பள்ளி வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறப்படுகிறது 

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் திடீரென 3 மாணவர்களுக்கு கொரோனா  தொற்று உறுதி என்ற தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top