Connect with us

பள்ளி திறந்த இரண்டே நாளில் மாணவிக்கு கொரோனா!

Tamil Nadu

பள்ளி திறந்த இரண்டே நாளில் மாணவிக்கு கொரோனா!

3ef545ee4e059aa6ab5e3ce6e85f5fe0

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவ மாணவிக மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் பள்ளிகள் திறந்த இரண்டாவது நாளே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பள்ளி திறந்த இரண்டாவது நாளே பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top