9 சிங்கங்களுக்கு கொரோனா: வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் அதிர்ச்சி!

eb4104b196b669e6c6c862020058929b

சென்னை வண்டலூரில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

வண்டலூரில் உள்ள 11 சிங்கங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த சிங்கங்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு போபாலில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது

இவ்வாறு 11 சிங்கங்களின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவற்றில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் ஒன்பது வயது சிங்கம் ஒருநாள் உயிரிழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 சிங்கங்களையும் தனியாக பராமரித்து வருவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 7 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment