தமிழ்நாட்டில் 812 பேருக்கு கொரோனா! 32 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பே இல்லை!!

கொரோனா

இந்தியாவின் பெரும் முயற்சியால் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் அவ்வப்போது இந்த கொரோனா  நோயின் பரவல் கண்டறியப்படுகிறது.

கொரோனா

அதன்படி நம் தமிழ்நாட்டில் புதிதாக 812 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 13 ஆயிரத்து 116 ஆக உள்ளது.

கொரோனாவால் இறந்தவர்கள்

அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 259 பேர் கொரோனா  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகள், வீடுகள், கண்காணிப்பு மையங்களில் தற்போது 9890 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில்  புதிதாக 114 பேருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. நேற்றையதினம் 129 பேருக்கு கொரோனா  இருந்த நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக காணப்படுகிறது.

கோவையில் ஒரே நாளில் புதிதாக 108 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 101845 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 26 லட்சத்து 67 ஆயிரத்து 67 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print