மீண்டும் அபாயம்; உயரும் கொரோனா! ஒரே நாளில் 739 பேருக்கு உறுதி!!

சீன நாட்டில் தோன்றி இன்று உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்ற மிக வீரியம் மிக்க வைரஸ் கிருமிதான் கொரோனா. இவை சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் அதிக வீரியத்துடன் பரவியது, ஆயினும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஆங்காங்கே கொரோனாவின் தாக்கம் தென்பட்டு கொண்டே காணப்படுகிறது.

கொரோனா

அதன்படி தமிழகத்தில் மேலும் 739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 619-லிருந்து 739 ஆக உயர்ந்துள்ளது என்று மருத்துவத் துறை கூறியுள்ளது. தமிழகத்தில் 728, வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்த 11 பேர் என மொத்தம் 739 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டது.

ஒரு லட்சத்து ஆயிரத்து 698 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 739 ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் புதிதாக 294 பேருக்கு உறுதியாகியுள்ளது என்று தமிழக மருத்துவத் துறை கூறியுள்ளது.

சென்னையில் ஏற்கனவே 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்று  எட்டு பேர் உயிரிழதமிழகத்தில் ஒரே நாளில் 739 பேருக்கு கொரோனா 8 பேர் உயிரிழப்புந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 6654 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து 614 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 27,02,588 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment