தமிழகம்
கோவையில் ஒரே கல்லூரியில் 46 மாணவிகளுக்கு கொரோனா: கேரளா காரணமா?
கோவையில் உள்ள நர்சிங் கல்லூரியில் ஒரே நேரத்தில் 46 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த சில மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டதை அடுத்து கேரளாவில் இருந்து அந்த மாணவிகள் கல்லூரிகளுக்கு வந்து விடுதியில் தங்கி இருந்ததாக தெரிகிறது.
அவர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் அவர்கள் மூலம் மேலும் சில மாணவிகளுக்கு கொரோனா பரவியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் மொத்தம் 46 மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கேரளாவிலிருந்து வந்த மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமல் தனிமைப்படுத்தும் காலத்தை நிர்ணயிக்காமல் வகுப்புகளுக்கு அனுமதித்த கல்லூரி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் இருந்துள்ளது. மேலும் ஒரே கல்லூரியில் படிக்கும் 46 மாணவிக்கு கொரோனா பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
