Connect with us

தந்தையை தொடர்ந்து மகனுக்கும் கொரோனா பாதிப்பு! சோகத்தில் மலையாள சினிமா!!

dulquer salmaan 1200 2

பொழுதுபோக்கு

தந்தையை தொடர்ந்து மகனுக்கும் கொரோனா பாதிப்பு! சோகத்தில் மலையாள சினிமா!!

தந்தையை தொடர்ந்து மகனுக்கும் கொரோனா பாதிப்பு! சோகத்தில் மலையாள சினிமா!!

சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்கள் அப்பா கதாநாயகன் என்பதால் தான் கதாநாயகன் என்று பல படங்களில் நடித்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் விமர்சனமாக காணப்படும். ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் இருந்தாலும், தந்தை ஹீரோவாக இருந்தாலும் தனது கடின உழைப்பும் விடா முயற்சியும் அவர்களை அதிக உயரத்திற்கு கொண்டு போய்விடும்.

அப்படி தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் தந்தை சினிமா துறையில் இருந்தாலும் தங்களின் அப்பா என்று அவர்கள் தந்தை அடையாளம் காணும் அளவிற்கு ஜொலித்து வருகிறார்கள். இவை தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளத்திலும் காணப்படுகிறது.

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக காணப்படுகிறார் மம்முட்டி. அவரின் மகனும் மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ரசிகர்கள் பட்டாளத்தை இழுத்து வைத்து உள்ளார். அவர் வேறு யாருமில்லை ரசிகர்களால் ‘குஞ்சிக’ என்று அழைக்கப்படுகிற ‘துல்கர் சல்மான்’.

இவர் நடிப்பில் வெளியான சார்லி, பெங்களூர் டேஸ் உள்ளிட்ட படங்கள் இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. இத்தகைய துல்கர் சல்மானுக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இவரின் தந்தையான மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டதாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டது .இந்த நிலையில் துல்கர் சல்மானும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top