சாதனை புரிந்த இந்தியா! ஒன்றரை வருடம் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு குறைவு!!

கண்ணுக்கு தெரியாமல் மனிதனுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் கிருமி கொரோனா. இவை இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக பரவியது. ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியால் இந்த கொரோனா  நோய்க்கிருமி இந்தியாவின் கைக்குள் வந்துள்ளது.

கொரோனா

இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 7579 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

கொரோனா

இந்தியாவில் 543 நாட்களில் இல்லாத அளவிற்கு தொற்று பாதிப்பு 7579 ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 236 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த இருபத்தினான்கு மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12202 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 584 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 117.63 கொரோனா கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71 லட்சத்து 92 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment