மதிமுக ஆட்சியில் நிகழ்ந்த சோகம்; வைகோவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பரவல் குறைவாக காணப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா பாதிப்பு அரசியல் மற்றும் சினிமா துறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கி கொண்டு வருகிறது. சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ள கமலஹாசன், கீர்த்திசுரேஸ், குஷ்பு போன்ற பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதேவேளையில் அரசியலிலும் எம்எல்ஏக்களுக்கு வரிசையாக கொரோனாவின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மிக முக்கிய அரசியல் வாதியான வைகோவிற்கு கொரோனாவின் பாதிப்பு கண்டறியப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதியானதால் அவர் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனாவின் பாதிப்பு உறுதியானதை அடுத்து சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார் வைகோ. இது கட்சியின் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
