News
35 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
கொரோனா பாதிப்பானது மீண்டும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் மத்தியில் தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

மேலும் மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு திட்டத்தினை அம்மாநில அரசு அமல்படுத்தியது. மேலும் இந்திய அளவில் 1.14 கோடி பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியானது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது எனவும் தகவல் வெளியானது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
