News
புதுச்சேரியில் புதிதாக 565 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது!5 பேர் பலி !
மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோயாக வளர்ந்துள்ளது கொரோனா வைரஸ், முதன் முதலில் கொரோனா நட்பு நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் இந்நோயின் தாக்கம் ஆனது இருந்தது தெரியவந்தது. குறிப்பாக இந்தியாவில் கடந்த ஆண்டில் கொரோனா நோய் தாக்கமானது பரவத் தொடங்கி கடந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் கொரோனா நோயின் தாக்கம் கடந்த சில தினங்களாக மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதன்படி ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் கொரோனா மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. மேலும் புதுச்சேரியில் புதிதாக இந்நோய்க்கு 565 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு 48336 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 713 ஆக அதிகரித்து புதுச்சேரியை வேதனையில் தள்ளியுள்ளது. மேலும் பல மாநிலங்களிலும் இதுபோன்ற உயிர் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது மிகுந்த சோகத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் இதற்காக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில கட்டுப்பாட்டு விதிகளையும் விதித்துள்ளார். அதன்படி பொது இடங்களில் முழு கவசம் அணிவது கட்டாயம் என்றும் கூறினார். மேலும் முக கவசம் அணியாதவர்கள் இடம் அபராதம் விதித்து அவர்களுக்கு முக கவசம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இன்னிலையில் புதுச்சேரியில் இவ்வாறு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.
