Connect with us

பல நாட்களுக்குப் பின்பு பதிவான கொரோனா உயிரிழப்பு!! சோகத்தில் மக்கள்!!

கொரோனாவால் இறந்தவர்கள்

செய்திகள்

பல நாட்களுக்குப் பின்பு பதிவான கொரோனா உயிரிழப்பு!! சோகத்தில் மக்கள்!!

தமிழ்நாட்டில் மெல்ல மெல்ல கொரோனாவின் பரவல் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் கடும் கட்டுப்பாட்டுகளை விதித்து கொண்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இன்றைய தினம் சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையிலும் கூட இன்றைய தினம் கொரோனா பாதிப்பு நேற்றைய விட சற்று அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. நேற்றைய தினம் 2654 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் இன்று 2662 பேருக்கு பாதிப்பு உறுதியாக உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால் புதிதாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனாவினால் மொத்த உயிரிழப்பு 38,027 ஆக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top