
News
உச்சத்தைத் தொடும் கொரோனா பாதிப்பு; வடகொரியாவில் 21 பேர் உயிரிழப்பு !!
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைத்து வந்த நிலையில் இந்த வைரஸ்க்கு பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா தொற்று இதுவரையில் இல்லை என அந்நாட்டு அரசு அறிவித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் பாதிப்பு அந்நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறது.
இதனிடையே அண்மையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அந்நாட்டு அதிபர் அறிவித்தார். தற்போது வடகொரியாவில் கொரோனா உயிரிழப்பு தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
அந்த வகையில் தற்போது புதிதாக 1 லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு காய்ச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் 21 நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
