நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி! 14 நாட்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை!!

உடலை வருத்தி நடித்து இன்று மக்களிடையே மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு வருகிறார் நடிகர் விக்ரம். நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வருகின்ற திரைப்படம் மகான்.

இந்த திரைப்படத்தில் இவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் இருந்த நடிகர் விக்ரமுக்கு தொடர்ந்து உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இதனால் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

பரிசோதனையின் முடிவுகளை நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதியானது. இதனால் நடிகர் விக்ரம் தனது வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். அவர் 14 நாட்களுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்படுகிறது. கொரோனாக்கான சிகிச்சையை வீட்டிலிருந்து மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment