News
திருச்சி இன்ஜினியரிங் காலேஜ் மாணவர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி!
சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசானது சில தினங்கள் முன்பாக மாநிலங்களுக்கிடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது.

இந்நிலையில் திருச்சியில் சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கிவருகிறது. கல்லூரியில் பயிலும் 15 மாணவர்களுக்கும், கல்லூரியின் ஒரு பேராசிரியருக்கு கொரோனா உறுதியானது.
தொடர்ந்து 286 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில் பேராசிரியர் உட்பட 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அரசு பொறியியல் கல்லூரி ஆனது மூடப்பட்டுள்ளது.
