இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்த கொரோனா ஏழை பணக்காரன் இப்படி என்ற ஒரு பாகுபாடுமின்றி அனைவருக்கும் பரவி வருகிறது. குறிப்பாக நம் தமிழகத்தில் அடுத்தடுத்து திரைத் துறையினர் மத்தியில் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
அதன் வரிசையில் சத்யராஜ், விக்ரம், வைகைப்புயல் வடிவேலு என பிரபல திரை துறையினர் மத்தியில் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலகநாயகன் கமலஹாசனுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த சூழலில் மற்றுமொரு நடிகைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அதன்படி பிரபல நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்பு உறுதியாகி விட்டது. கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து தனிமைப்படுத்தி கொண்டதாக குஷ்பு டுவிட்டரில் கூறியுள்ளார்.