
தமிழகம்
போன வேகத்தில் திரும்ப வரும் கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை குறைவு!!
கடந்த பத்து நாட்களுக்கு முன்பே தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு சற்று ஏறுமுகமாக காணப்பட்டது. ஏனென்றால் தினம் தோறும் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.
அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி கொண்டு வந்தது. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மீண்டும் முக கவசம் அணியும் உத்தரவு கட்டாயமாக்கப்பட்டது.
இதன் விளைவாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழகத்தில் 2142 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2316 ஆக பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 607 இலிருந்து 561 ஆக குறைந்துள்ளது. இதனால் கொரோனா சிகிச்சையில் 16 ஆயிரத்து 829 பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
