Connect with us

இரண்டாவது நாளாக 2000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!! மக்கள் பீதி;

கொரோனா

தமிழகம்

இரண்டாவது நாளாக 2000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு!! மக்கள் பீதி;

கடந்த சில வாரங்களாக நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு ஏறு முகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த நேற்றைய தினம் நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 2000 நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தி கடந்து பதிவாகியுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் 2069 ஆக இருந்த நிலையில் இன்றைய தினம் 2385 ஆக உயர்ந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12000 கடந்துள்ளதால் மருத்துவமனையில் உள்ளவர்கள் பெரும் பின்னலை சந்திக்க நேரிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கொரானாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றைய தினம் 11,094 இருந்த நிலையில் இன்றைய தினம் 12,158 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1321 பேர் டிஸ்டார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கு போடபடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top