
செய்திகள்
ஒரே நாளில் 2.12 லட்சம் பேர் பாதிப்பு; கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா;
இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு தோன்றி இன்றுவரையும் பாதிப்பை எண்ணிக்கை சற்று அதிகமாகவே காணப்படும் நோயாக வலம் வந்து கொண்டு வருகிறது கொரோனா. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது.
ஆனால் உலக அளவில் பார்க்கும்போது நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டு வருகிறது. அதன்படி உலகளவில் இதுவரை கொரோனாவுக்கு 58.20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 64.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 55.21 கோடி பேர் குணமடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளில் மிகவும் பிரதான இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஒரே நாளில் 12,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் எட்டு பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதைவிட ஜப்பானில் ஒரே நாளில் 2.12 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் 73 589 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 36 ஆயிரத்து 966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே வருவது கண்முன்னே தெரிகிறது.
