மெல்ல மெல்ல அதிகரித்து கொரோனாவின் பாதிப்பு நம் தமிழகத்தில் தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக தெரிகிறது. கொரோனாவின் பாதிப்பு கடந்த வாரம் 2500 ஐ கடந்த பதிவானது. ஆனால் இன்றைய தினமும் தமிழ்நாட்டில் புதிதாக 2099 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனாவால் புதிதாக ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,031 ஆக உள்ளது.
மேலும் தலைநகர் சென்னையில் மேலும் 516 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் புதிதாக 2290 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
எனவே தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 71 ஆயிரத்து 816 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 16,504 ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.