Connect with us

கொரோனாவுக்கு குட் பாய்! அப்பாடா தப்பிச்சோம்-பெருத்த நிம்மதி!!

கொரோனா

தமிழகம்

கொரோனாவுக்கு குட் பாய்! அப்பாடா தப்பிச்சோம்-பெருத்த நிம்மதி!!

கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது அதிலும் குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 2500 கடந்து பதிவாகி கொண்டு வந்தன.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைய தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இன்றைய தினம் 2,500க்கு கீழாக கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை பதிவாக்கி மக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2448 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ துறை கூறியுள்ளது. நேற்றைய தினம் 2537 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

மேலும் இன்றைய தினம் கொரோனாவினால் தமிழ்நாட்டில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் மருத்துவத்துறை கூறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38028 ஆகவே உள்ளது.

தலைநகர் சென்னையில் கொரோனாவின் எண்ணிக்கை ஒரே நாளில் 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த நாட்களை விட சற்று குறைவு என்பது பேரானந்தமாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top