மீண்டும் ஆட்டத்த ஆரம்பித்த கொரோனா! அச்சத்தில் சென்னைவாசிகள்!!

கண்ணுக்கே தெரியாமல் மனிதனுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ்.கொரோனா முதலில் சீன நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகமெங்கும் கொரோனா பரவியது.

கொரோனா

இந்த கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிகமாக பரவியது. ஆனால் இந்தியாவின் பெரும் முயற்சியால் இந்த கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த  நிலையில் மீண்டும் இந்த கொரோனா  நோய் பரவல் தமிழ்நாட்டில் படிப்படியாக உயர்கிறது.

கொரோனா

அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக 862 பேருக்கு கொரோனா  நோய் கண்டறியப்பட்டுள்ளது. இவை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் ஒரே நாளில் இந்த கொரோனா  வைரசுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சென்னையில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

அதன்படி சென்னையில் நேற்றைய தினம் கொரோனா நோய் பரவல் 106 பேருக்கு கண்டறியப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது சற்று உயர்ந்து இன்றைய தினம் கொரோனா பரவல் 122 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment