Connect with us

தமிழகத்தில் ஆட்சியாளர்களை விட்டுவைக்காமல் தாக்கும் கொரோனா! அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கொரோனா

செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியாளர்களை விட்டுவைக்காமல் தாக்கும் கொரோனா! அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழகத்தில் ஆட்சியாளர்களை விட்டுவைக்காமல் தாக்கும் கொரோனா! அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!!

இந்தியாவில் எதிர்பாராதவிதமாக கொரோனாவின் பாதிப்பு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. இவை இந்தியா மட்டுமின்றி தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்திய மாநிலங்களில் காரணம் கொரோனாவின் பாதிப்பு உள்ள மாநிலங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 3வது இடம் கிடைத்துள்ளது மிகுந்த வருத்தமான தகவலாக காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எந்த ஒரு பாகுபாடின்றி பலருக்கும் உறுதியாகி கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமா துறையில் அடுத்தடுத்து பல முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கு தொடர்ச்சியாக பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த வரிசையில் தமிழகத்தின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ramachandran

அதன்படி தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் ஆட்சியாளர்கள் மத்தியிலும் காணப்படுவது மக்களுக்கு அச்சத்தை கொடுக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top