கண்ணுக்குத் தெரியாமல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிக உயிரிழப்பை உருவாக்கிக் கொண்டு வருகிறது கொரோனா. இந்தக் கொரோனா முதலில் 2019ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் 2020ஆம் ஆண்டில் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த கொரோனா நோய் பரவியது. குறிப்பாக நம் இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலரும் இந்த கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஆங்காங்கே நோயின் தாக்கம் கண்டறியப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவில் தெரிந்துள்ளது. இதனால் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.