Connect with us

அமெரிக்க அதிபரின் மனைவிக்கு மீண்டும் கொரோனா!! வெள்ளை மாளிகை தகவல்!!

1747328 jill biden

செய்திகள்

அமெரிக்க அதிபரின் மனைவிக்கு மீண்டும் கொரோனா!! வெள்ளை மாளிகை தகவல்!!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் அதன்  தாக்கமானது இன்னும் குறைந்தபாடில்லை. குறிப்பாக பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்த போதிலும் வைரஸை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தெற்கு கரோலினாவுக்கு அமெரிக்க அதிபரான ஜோ பைடனுடம் சென்று வந்த நிலையில் மீண்டும் ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 10 நாட்களுக்கு வீட்டிற்குள் தனிமைப்படுத்திக் கொள்வார் என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top