Connect with us

மீண்டும் ஐபிஎல்லில் மற்றுமொரு தமிழக வீரருக்கு “கொரோனா”!!

Sports

மீண்டும் ஐபிஎல்லில் மற்றுமொரு தமிழக வீரருக்கு “கொரோனா”!!

88cbe9aa4b98a7f51e91f767018433ac

தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும் ஒரு கிரிக்கெட் தொடர் என்றால் அதனை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் என்றே கூறலாம். மேலும் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வந்து பங்கேற்று கொள்வர். மேலும் இது ஒரு 20 ஓவர் போட்டி. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மத்தியில் கொரோனா கண்டறியப்பட்டது.8fbc185996deeec96cafdf3f28fec47c

இதனால் சில மாதங்களுக்கு இந்த விளையாட்டு தொடர் தடை செய்யப்பட்டிருந்தது. மேலும் தற்போது இந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு மிகவும் பாதுகாப்பான சூழலில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன .இந்நிலையில் போட்டி தொடங்கி 3 நாட்களே ஆன நிலையில் தற்போது அங்குள்ள வீரர்களுக்கு கொரோனா கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட அணி நிர்வாகத்தின் ஆறுபேரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். .மேலும் சில மாதங்கள் முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதன்முதலாக கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி என்ற தமிழக வீரருக்கு நோய் கண்டறிய பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக 14 ஆவது ஐபிஎல் தொடர் பாதியில் தடைபட்டு மீண்டும் தொடங்கிய நிலையில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் நடராஜனுக்கு கொரோனா ஏற்பட்டாலும் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று ஐபிஎல் அறிவித்துள்ளது. மேலும் அணியில் இருந்த மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று தெரியவந்துள்ளது என்றும் ஐபிஎல் கூறியுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top