பிரபல பழம்பெரும் பின்னணிப் பாடகியைத் தாக்கிய கொரோனா! ஐசியு பிரிவில் அனுமதி!

நாள்தோறும் திரைத் துறையினர் மத்தியில் கொரோனா  பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.. குறிப்பாக தமிழகத்தில் அடுத்தடுத்து பிரபல நடிகைகள் நடிகர்கள் மத்தியில் கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்றைய தினம் பாஜகவின் மேடைப் பேச்சாளரான நடிகை குஷ்புவுக்கு கொரோனா  உறுதியானது.

அதன் பின்னர் அவர் தனிமைப்படுத்தி கொண்டார். தொடர்ச்சியாக நடிகர் விக்ரம், கமலஹாசன், சத்யராஜ், வடிவேலு, நடிகை சென் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில் இந்த கொரோனா பாதிப்பு இந்திய சினிமாவின் மத்தியிலும் காணப்படுகிறது.

அதன்படி பிரபல பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா  அறிகுறிகள் லேசாக உள்ள நிலையில் மும்பை மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லதா மங்கேஷ்கர் நலமாக இருக்கிறார் என்று அவரது மருமகள் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் லதா மங்கேஷ்கருக்கு வயது முதிர்வு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐசியு பிரிவில் அனுமதிக்க பட்டிருக்கிறோம் தவிர வேறு காரணம் இல்லை என்றும் அவரது மருமகள் தரப்பில் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment